Friday, December 9, 2011

ஆசிரியர்களிற்கு உதவித்தொகை கொடுப்பனவு.


கலாநிதி தியாகராஜா மத்திய மகா வித்தியாலயத்தில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றும் மூன்று ஆசிரியர்களிற்கு பிருத்தானிய நலன்புரிச்சங்கத்தினர் உதவித்தொகைக் கொடுப்பனவை வழங்கியுள்ளனர். இரு ஆசிரியர்களிற்கு ஒன்பது மாதகால கொடுப்பனவாக 27,000 ரூபாவும் ஒரு ஆசிரியருக்கு பதினொரு மாத கொடுப்பனவாக 33,000 ரூபாவும் வழங்கப்பட்டது. இக்கொடுப்பனவுகளை காரைநகர் அபிவிருத்திச்சபைத் தலைவர் க.சோமசேகரம் வழங்குவதனையும் அருகில் பாடசாலை அதிபர் பொ.சிவனந்தராஜா நிற்பதையும் படங்களில் காணலாம்.

No comments:

Post a Comment