பாடசாலை அதிபர்
பாடசாலை கீதம்
பல்லவி
இராகம் - மிலஹரி
தாய் மலரடி பணிவோம் நம் கல்லூரி
தமிழ் எனும் அமுதினை பருகிட நிலை கொண்ட (தாய்..)
அனுபல்லவி
உவமையிலாதோர் உமையவள் ஞானத்தை
உண்டருள் மதலையின் உயர் பெயர் தாங்கும் நம் (தாய்..)
சரணம்
இராகம் - பூபாளம்
அன்றொரு நாட்பல வாண்டுகளின் முன்னர்
அன்புரு நெஞ்சினன் ஆய சயம்புவின்
சிந்தனையின் தவயோகப் பொருளுருவில்
வந்தனை நம்தம்மை வாழ்விக்க மகிழ்வோடு (தாய்..)
இராகம் - அடானா
இன்னிசை யனிந்தனம் பொன்னினம் செல்வியை
இன்தமிழ் சாபையின் ஏந்திழை அம்மையை
கற்பனைத் தேனியை காவிய ரசத்தினை
அற்புதத்தேவியை ஆவியைக் கருணையின் (தாய்..)
இராகம் - சண்முகப்பிரியா
இயலிசை யாயினை பலவித கலைகளும்
ஏந்தியவாணியை விஞ்ஞான சக்தியை
பேணிய பெருந்தவப்பேற்றினை யூற்றினை
மானியல் தமிழ் பாவாய் வாழ்த்துவம் எங்கள் (தாய்...)
No comments:
Post a Comment