காரைநகரும் விளையாட்டுத் துறையும்
எஸ்.கே. சதாசிவம்.
திரு. எஸ்.கே.சதாசிவம் காரை இந்துக் கல்லூரியினதும் காரை விளையாட்டுக் கழகத்தினதும் கோல் காப்பாளர்; என்ற நிலையில் பலருக்கு அறிமுகமானவர். கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலயம் வசாவிளான் மத்திய மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் உதைபந்தாட்ட அணிகளின் பயிற்றுவிப்பாளர்
மனவளம் நிறைந்த காரைநகர் மக்கள் பழமைக்கு பழமையாயும் புதுமைக்கு புதுமையாயும் தாம் பிறந்த பூமிக்கு புகழ் தேடித் தந்தார்கள். காரைநகரில் தோன்றி மறைந்து புகழ் சேர்த்த பெருமக்கள் வரிசையில் விளையாட்டுத் துறையில் ஈடுபட்டோரும் உள்ளனர்.
பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை உடற்கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டு கல்விமுறையில் சிறப்பான வகிபாகத்தை உடற் கல்வி பெற்றுள்ளது. உடற்கல்வி மாணவர்களின் ஆளுமையை செம்மைப்படுத்தி, செழுமைப்படுத்தி, வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களிலும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகம் கொடுக்கத் தேவைப்படும் பக்குவத்தையும், பயிற்சியையும் வழங்குகின்றது. மாணவர்களின் சமநிலை ஆளுமை வளர்ச்சியுற இது அத்திவாரமாக அமைகின்றது.
No comments:
Post a Comment