Friday, November 25, 2011

துறைமுகம்

துறைமுகம்

 துறைமுகம் என்பது கப்பல்கள்
படகுகள்   மற்றும் வந்து தங்கி செல்வதற்குரிய இடம் ஆகும். இங்கே கப்பல்களுக்கு வேண்டிய பொருட்கள், தொழிலாளருக்கு இருப்பிடம், போன்றன வழங்கப்படும். துறைமுகங்களை இயற்கைத் துறைமுகங்கள், செயற்கைத் துறைமுகங்கள் என இருவகைப் படுத்தலாம். இயற்கைத் துறைமுகங்கள் இராணுவ, பொருளாதாரக் காரணங்களால் முக்கியத்துவமுடையவையாக இருந்து வருகின்றன. துறைமுகங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பறைசாற்றும் முக்கிய அம்சமாக உள்ளது. இது மிகப் பெரும் சரக்குகள், பொருட்களை ஒரு நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு கடல் போக்குவரத்தின் மூலம் எடுத்துச் செல்ல உதவுகின்றன.

No comments:

Post a Comment