Thursday, February 16, 2012

காரைநகரில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் நிலையான வைப்புப்பணம் சுமார் 4இலட்சம் ரூபாய்கள் மோசடி அதிபர் வாக்குமூலம்


காரைநகரில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் நிலையான வைப்புப்பணம் சுமார் 4இலட்சம் ரூபாய்கள் மோசடி அதிபர் வாக்குமூலம்
காரைநகர் கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலய பழையமாணவர் சங்கத்தின் 4இலட்சம் ரூபா பெறுமதியான நிலையான வைப்புச்சான்றிதழ் இன்றுவரை தம்மிடம் ஒப்படைக்கப்படவில்லை என வித்தியாலய அதிபர் பொன்.சிவானந்தராஜா கவலை தெரிவித்துள்ளார். எமது இணையத்தளத்திற்கு தகவல் தருகையில் காரை தியாகராஜா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் கடந்த மாதம் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது புதிய நிர்வாக சபையும் தெரிவுசெய்யப்பட்டது. இக்கூட்டத்தில் முன்னாள் பொருளாளராக கடமையாற்றிய ந.பாரதி அவர்கள் தமது அறிக்கையில் நிலையான வைப்பாக 4இலட்சம் ரூபா இருப்பதாக காட்டியுள்ளார். ஆனால் இன்றுவரை(14.02.2012) புதிய நிர்வாகசபையிடம் இந்நிலையான வைப்புச் சான்றிதழ் ஒப்படைக்கப்படவில்லை என்று எமது இணையத்தளத்திற்கு வித்தியாலயத்தின் அதிபர் பொன்.சிவானந்தராஜா கவலையுடன் தெரிவித்துள்ளார். பழைய மாணவர் சங்கக்கூட்டம் நடைபெற்று சுமார் 45நாட்கள் கடந்த நிலையிலும் முன்னாள் பொருளாளரான பாரதி அவர்களை இந்நிலையான வைப்புச் சான்றிதழ் தொடர்பாக கேட்கும் பொழுதெல்லாம் சாக்குப்போக்குச் சொல்லிவரும் இவர் இறுதியாக அந்த நிலையான வைப்புச்சான்றிதழ் தொலைந்து விட்டது எனவும் கூறுகின்றார். ஆனால் அதனை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டும் அதுவும் பயனளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இங்கு குறிப்பிட்ட ந.பாரதி அவர்கள் கடந்த பழைய மாணவர் சங்கத்தில் பொருளாளராக கடமையாற்றியவர் தற்போது இப்பாடசாலை அபிவிருத்திச்சபையின் செயலாளராகவும் மணிவாசகர் சபையின் பொருளாளராகவும் காரை கிட்ஸ்பார்க் முன்பள்ளியின் அங்கத்தவராகவும் செயற்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் செய்திகளை அலசி ஆராயாமல் முற்றிலும் போலியான செய்திகளினைப் பிரசுரித்தும் உலகம் வாழ் காரைநகர் மக்களை மிகவும் இழிவான முறையில் எழுதிவரும் காரைநியூஸ்  இணையத்தளத்தின் காரைநகர் செய்தியாளருமாவார்.
இப்பொதுப்பணிகளில் ஈடுபடுபவர்கள் தங்கள் கடமைக்கு மேலதிகமாக சில வேளைகளில் தவறுகள் ஏற்பட்டாலும் கூட அதனை உடனடியாக திருத்தி நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். இந்த நிலையான வைப்புச்சான்றிதழ் தொடர்பாக அறிந்த காரை இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காரை இந்துக்கல்லூரிக்கு பணம் கிடைத்தது!கல்லூரி அதிபர் SMS இல் தகவல்


கடந்த 11.02.2012 அன்று நடைபெற்ற காரைநகர் இந்துக்கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிக்கென கனடா-காரை இந்து பழைய மாணவர் சங்கத்தினரால் அனுப்பிவைக்கப்பட்ட 65ஆயிரம் ரூபா பணம் கிடைக்கப்பெற்றதாக பாடசாலையின் அதிபர் திரு.பொன்.சிவானந்தராஜா SMSமூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இத்தகலை கனடா-காரை இந்து பழைய மாணவர் சங்கத்தின்  பொருளாளர் திரு.நடராசா பிரகலாதீஸ்வரன் எமது  இணையத்தளத்திற்கு அறியத்தந்துள்ளார். அதன் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியைக் கீழே காணலாம்.
                                
தலைவர்: கலாநிதி. தர்மலிங்கம் திருச்செல்வம்     பொருளாளர்: நடராசா பிரகலாதீஸ்வரன்
         
    

கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலய விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.


கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலய விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
காரைநகர் கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி இன்று சிறப்பாக நடைபெற்றது.இன்று பிற்பகல் 1மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற இவ்விளையாட்டுப்போட்டியில் பிரதம விருந்தினராக யாழ்.இலங்கை வங்கி பிரதி முகாமையாளர் திரு.P.சிவபாதம் அவர்களும் சிறப்பு விருந்தினராக சீமாட்டி நிறுவன உரிமையாளரும் காரை அபிவிருத்திச்சபை பொருளாளருமான திரு.L.சற்குணராஜா அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 
இவ்விளையாட்டுப்போட்டி நிகழ்வுக்கென கனடா-காரை இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் சுமார் 65ஆயிரம் ரூபாவினை ஏற்கனவே கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திற்கு அனுப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
விழாவிற்கு விருந்தினர்கள் அழைத்து வரும்போது
மாணவிகளின் இசைவும் அசைவின் போது
இடைவேளையின் போது மாணவர்களின் தசைநார்ப்பயிற்சியின் போது
மாணவர்களின் விளையாட்டுக்களையும் பரிசளிப்பு நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.


Saturday, January 7, 2012



photos
















ஈழத்துச்சிதம்பரத்தில் 8ம் நாள் திருவெம்பாவை உற்சவத்;தில் காவடிக் காட்சிகளை இங்கே காணலாம்.


ஈழத்துச்சிதம்பரத்தில் 8ம் நாள் திருவெம்பாவை உற்சவத்;தில் காவடிக் காட்சிகளை இங்கே காணலாம்.

Friday, January 6, 2012

கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த மகஜர் கையளிப்பு

கடந்த 8.12.2011 அன்று காலை 10மணிக்கு காரைநகர் உ.அ.அதிபர் அலுவலகத்துக்கு வந்த சுமார் 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் இம்மகஜரைக் கையளித்துள்ளனர். இம்மகஜரில் குறிப்பிட்டதாவது காரைநகர் மேற்கு விவசாயிகளாகிய நாம் கட்டாக்காலி கால்நடைகளினால் மாபெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். நாம் விதைத்துவைத்த பயிர்களை ஆலய மாடுகள் உட்பட கட்டாக்காலி மாடுகளும், கமக்காரர் மாடுகளும் இரவு வேளைகளில் அழித்து வருகின்றன. இதனால் நாம் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். மிருக வைத்தியரின் சிபார்சுக்கமைய அதற்குரிய உரிமம் கொடுக்கப்படவில்லை. இதனால் பசுமாடுகளானாலும் சரி எருது மாடுகளானாலும் சரி விற்கப்படும் மாடுகளை உடனுக்குடன் பொன்னாலைக்கப்பால் கொண்டுசெல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும். கட்டாக்காலி மாடுகளை முற்றாகப்பிடிப்பதற்கு தங்களால் ஆன உதவியை வழங்க வேண்டும் என காரைநகர் உதவி அரசாங்க அதிபர் இ.த.ஜெயசீலனிடம் மன்றாட்டமாக கோரியுள்ளனர். இம்மகஜர் கையளிப்பின்போது காரைநகர் பிரதேசசபையின் எதிர்க்கட்சி உறுப்;பினர் திரு.வி.கண்ணனும் காரைநகர் கமநலசேவை உத்தியோகஸ்தர் திரு. க.கலைச்சந்திரனும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளையார் கதை ஆரம்பம் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது


பிள்ளையார் விரத ஆரம்பத்தின் 108சங்காபிஷேகத்துடன் ஆரம்பமாகி இவ்விரத ஆரம்பத்தில் இலட்சார்ச்சனை நடைபெற்று பிள்ளையார்கதை நடைபெற்றது. அதற்கான படங்களை நீங்கள் கீழே காணலாம்.

 

காரைநகர் அபிவிருத்திக்கென பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியிலிருந்து 24இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு


காரைநகர் அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களால் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு நிதியிலிருந்து சுமார் 24இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியின் வேலைத்திட்டங்கள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் பூர்த்தியாக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வரவுசெலவுத் திட்டத்தினூடாக பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்நிதிகளை ஒதுக்கியுள்ளனர்.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. விஜயகலா மகேஸ்வரன் தனது நிதியிலிருந்து
1. வட பிராந்திய போக்குவரத்துச்சபையின் காரைநகர் அலுவலகத்திற்கு கணினி கொள்வனவுக்கென சுமார் 75ஆயிரம் ரூபாவும்,
2. இலகடி அத்திபுர கந்தன் ஆலய கட்டிட நிதிக்காக 75ஆயிரம் ரூபா,
3. காரைநகர் பிரதேச குடிநீர் விநியோகத் தாங்கிகள் கொள்வனவுக்கென 8இலட்சம் ரூபா,
4. தங்கோடை கிராம அபிவிருத்திச்சங்க கணினி மற்றும் போட்டோ கொப்பி இயந்திர கொள்வனவுகளுக்காக 7இலட்சம் ரூபா,
5. வேரப்பிட்டி ஸ்ரீ கணேசா வித்தியாலய அலுவலகத்திற்கான அலுமாரி கொள்வனவுக்கு 25ஆயிரம் ரூபா,
6. தோப்புக்காடு மறைஞான சம்பந்தர் வித்தியாசாலையின் அலுமாரி கொள்வனவுக்கென 25ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்
1. ஊரி அன்னமார் ஆலய வாகன கொள்வனவுக்கு 1இலட்சம் ரூபா
2. பிட்யெல்லை ஞானவைரவர் ஆலய நிதிக்காக 1இலட்சம் ரூபா
3. விளானை முன்பள்ளி பாடசாலைக் கட்டிடத்திற்கு 75ஆயிரம் ரூபா
4. மருதபுரம் ஸ்ரீமுருகன் ஆலய கட்டிட நிதிக்கு 1இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது
அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சில்வஸ்ரின் அலெஸ்ரினின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்
1. கலைவாணி சனசமூக நிலைய தளபாடக் கொள்வனவு 25ஆயிரம் ரூபா
2. திக்கரை திருச்செந்தூரன் முன்பள்ளி தளபாடக் கொள்வனவுக்கு 25ஆயிரம் ரூபா
3. கங்கைமதி சனசமூக நிலைய அபிவிருத்திக்கு 1இலட்சம் ரூபா
4. வியாவில் ஐயானார் மீனவ சங்கத்தின் மின்இணைப்பிற்காக 65ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
 அடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்
1. வேரப்பிட்டி கிராம அபிவிருத்திச்சங்க தளபாடக் கொள்வனவுக்கு 50ஆயிரம் ரூபாவும்
2. வேதரடைப்பு கிராம அபிவிருத்திச்சங்க தளபாட கொள்வனவுக்கு 50ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களாலும் ஒதுக்கப்பட்ட 16வேலைத்திட்டங்களும் இம்மாத இறுதிக்குள் நிறைவடையவுள்ளன.

இலங்கையில் க.பொ.த. சாதாரணம் 12ம் திகதி ஆரம்பமாகியது

இலங்கையில் நடைபெறும் க.பொ.த.சாதாரணம்(O/L) பரீட்சையில் காரைநகரின் 4பாடசாலைகளிலிருந்து சுமார் 174மாணவர்கள் இன்றைய தினம் பரீட்சைக்குத் தோற்றினர். இதில் காரைநகர் தியாகராஜா மத்திய மகா வித்தியாலயத்தில் 81மாணவர்களும் யாழ்ரன் கல்லூரியல் 51மாணவர்களும் வியாவில் சைவ வித்தியாசாலையில் 19மாணவர்களும் சுந்தரமூர்த்திநாயனார்; வித்தியாசாலையில் 23மாணவர்களுமாக மொத்தம் 174மாணவர்கள் தோற்றினர். 12ம் திகதி ஆரம்பமாகிய இப்பரீட்சை எதிர்வரும் 21ம் திகதி நிறைவுபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் சிறப்பாக பரீட்சை எழுதி சித்தியடைய karainagar.com இணையத்தளம் வாழ்த்துகிறது.