Friday, January 6, 2012

காரைநகர் அபிவிருத்திக்கென பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியிலிருந்து 24இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு


காரைநகர் அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களால் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு நிதியிலிருந்து சுமார் 24இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியின் வேலைத்திட்டங்கள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் பூர்த்தியாக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வரவுசெலவுத் திட்டத்தினூடாக பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்நிதிகளை ஒதுக்கியுள்ளனர்.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. விஜயகலா மகேஸ்வரன் தனது நிதியிலிருந்து
1. வட பிராந்திய போக்குவரத்துச்சபையின் காரைநகர் அலுவலகத்திற்கு கணினி கொள்வனவுக்கென சுமார் 75ஆயிரம் ரூபாவும்,
2. இலகடி அத்திபுர கந்தன் ஆலய கட்டிட நிதிக்காக 75ஆயிரம் ரூபா,
3. காரைநகர் பிரதேச குடிநீர் விநியோகத் தாங்கிகள் கொள்வனவுக்கென 8இலட்சம் ரூபா,
4. தங்கோடை கிராம அபிவிருத்திச்சங்க கணினி மற்றும் போட்டோ கொப்பி இயந்திர கொள்வனவுகளுக்காக 7இலட்சம் ரூபா,
5. வேரப்பிட்டி ஸ்ரீ கணேசா வித்தியாலய அலுவலகத்திற்கான அலுமாரி கொள்வனவுக்கு 25ஆயிரம் ரூபா,
6. தோப்புக்காடு மறைஞான சம்பந்தர் வித்தியாசாலையின் அலுமாரி கொள்வனவுக்கென 25ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்
1. ஊரி அன்னமார் ஆலய வாகன கொள்வனவுக்கு 1இலட்சம் ரூபா
2. பிட்யெல்லை ஞானவைரவர் ஆலய நிதிக்காக 1இலட்சம் ரூபா
3. விளானை முன்பள்ளி பாடசாலைக் கட்டிடத்திற்கு 75ஆயிரம் ரூபா
4. மருதபுரம் ஸ்ரீமுருகன் ஆலய கட்டிட நிதிக்கு 1இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது
அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சில்வஸ்ரின் அலெஸ்ரினின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்
1. கலைவாணி சனசமூக நிலைய தளபாடக் கொள்வனவு 25ஆயிரம் ரூபா
2. திக்கரை திருச்செந்தூரன் முன்பள்ளி தளபாடக் கொள்வனவுக்கு 25ஆயிரம் ரூபா
3. கங்கைமதி சனசமூக நிலைய அபிவிருத்திக்கு 1இலட்சம் ரூபா
4. வியாவில் ஐயானார் மீனவ சங்கத்தின் மின்இணைப்பிற்காக 65ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
 அடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்
1. வேரப்பிட்டி கிராம அபிவிருத்திச்சங்க தளபாடக் கொள்வனவுக்கு 50ஆயிரம் ரூபாவும்
2. வேதரடைப்பு கிராம அபிவிருத்திச்சங்க தளபாட கொள்வனவுக்கு 50ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களாலும் ஒதுக்கப்பட்ட 16வேலைத்திட்டங்களும் இம்மாத இறுதிக்குள் நிறைவடையவுள்ளன.

No comments:

Post a Comment