Friday, November 25, 2011

karainagar

காரைநகர் வரலாறு

காரைநகர் இலங்கையின் வடக்கு மாகாணத்தில்  மேற்குத்திசையில் அமைந்துள்ள ஏழு  சப்த தீவுகளில்ஒன்றாகும். மற்றைய தீவுகளை விட யாழ்நகருக்கு அண்மையில் இருப்பதுதான் காரைநகர். இது நாற்புறமும் கடலினால் சூழப்பட்ட ஒரு தீவு ஆகும்.
இவ்வூரில் அப்பொழுது ஏராளமான காரைச்செடிகள் நின்றமையால் அப்பெயர் பெற்றது என்றும் பெயருக்குரிய காரணம் கூறப்படுகின்றது. காரைதீவு வடக்கு, மேற்கு திசைகளில் ஆழமான பாக்கு நீரிணைக் கடலாலும் கிழங்கு, தெற்கு திசைகளில் ஆழமற்ற வற்றும் தன்மையுள்ளபரவைக் கடலாலும்  சூழப்பட்டுள்ளது.
பிரித்தானியரின் ஆட்சியில் 1869 அம் ஆண்டில் அப்போது அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையால் பொன்னாலைக் கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து காரைத்தீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இவ்விணைப்பு தெருவினது நீளம் சுமார் 3 கிலோ மீட்டர் ஆகும். இத்தரைத் தொடர்பினை அடுத்து சேர் பொன் இராமநாதனின் விதைந்துரைப்புடன் காரைதீவினை 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றிக் கொண்டனர்.
இங்கே வலந்தலை, கோவளம், தங்கோடை, கருங்காலி, பலுகாடு, களபூமி என்ற ஆறு பெருங்குறிச்சிகள் உள்ளன. காரைநகர் ஏழு கிலோ மீட்டர் நீளமும் நாலரை கிலோ மீட்டர் அகலமும் உடையது. மேற்கே உள்ள கோவளக் கடற்கரையில் கலங்கரை விளக்கமும் தெற்கே இயற்கையாக அமைந்த கப்பல் துறைமுகமும் உள்ளன. நகரின் வடக்கு பக்கமாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. திண்ணபுரம் சிவன் கோவில். இக்கோவிலுக்கு கிழக்கு, தெற்கு திசைகளில் பசும்புல் தரைகளும் மேற்கு வடக்கு திசைகளில் தென்னஞ்சோலைகளும் அதனை அடுத்தாற் போல கசூரினா கடற்கரை உள்ளது.

2 comments:

  1. மிகவும் நல்ல இருக்கு

    ReplyDelete
  2. இது காரைநகரின் ஒழுங்கான வரலாறு அல்ல.அங்கெ ஆந்திராவிலிருந்து அரியநாயக முதலியால் குடியேற்றப்பட்ட வடுகர்,அதன் பூர்வீகக்குடிகளின் நிலா புலன்களைப் பிடுங்கியபின் அவர்களை மேற்கு,தெற்கு,கிழக்கு எனத் துரத்தினர். துரத்தப்பட்டவர்கள் காரைநகரின் 2 வது பெரும் குடிகளாகிய மள்ளர்/பள்ளர் ஆகியோரே.உண்மை வரலாறு எழுதுவோமா?

    ReplyDelete