Saturday, January 7, 2012
ஈழத்துச்சிதம்பரத்தில் 8ம் நாள் திருவெம்பாவை உற்சவத்;தில் காவடிக் காட்சிகளை இங்கே காணலாம்.
ஈழத்துச்சிதம்பரத்தில் 8ம் நாள் திருவெம்பாவை உற்சவத்;தில் காவடிக் காட்சிகளை இங்கே காணலாம்.
Friday, January 6, 2012
கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த மகஜர் கையளிப்பு
கடந்த 8.12.2011 அன்று காலை 10மணிக்கு காரைநகர் உ.அ.அதிபர் அலுவலகத்துக்கு வந்த சுமார் 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் இம்மகஜரைக் கையளித்துள்ளனர். இம்மகஜரில் குறிப்பிட்டதாவது காரைநகர் மேற்கு விவசாயிகளாகிய நாம் கட்டாக்காலி கால்நடைகளினால் மாபெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். நாம் விதைத்துவைத்த பயிர்களை ஆலய மாடுகள் உட்பட கட்டாக்காலி மாடுகளும், கமக்காரர் மாடுகளும் இரவு வேளைகளில் அழித்து வருகின்றன. இதனால் நாம் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். மிருக வைத்தியரின் சிபார்சுக்கமைய அதற்குரிய உரிமம் கொடுக்கப்படவில்லை. இதனால் பசுமாடுகளானாலும் சரி எருது மாடுகளானாலும் சரி விற்கப்படும் மாடுகளை உடனுக்குடன் பொன்னாலைக்கப்பால் கொண்டுசெல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும். கட்டாக்காலி மாடுகளை முற்றாகப்பிடிப்பதற்கு தங்களால் ஆன உதவியை வழங்க வேண்டும் என காரைநகர் உதவி அரசாங்க அதிபர் இ.த.ஜெயசீலனிடம் மன்றாட்டமாக கோரியுள்ளனர். இம்மகஜர் கையளிப்பின்போது காரைநகர் பிரதேசசபையின் எதிர்க்கட்சி உறுப்;பினர் திரு.வி.கண்ணனும் காரைநகர் கமநலசேவை உத்தியோகஸ்தர் திரு. க.கலைச்சந்திரனும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
பிள்ளையார் கதை ஆரம்பம் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது
பிள்ளையார் விரத ஆரம்பத்தின் 108சங்காபிஷேகத்துடன் ஆரம்பமாகி இவ்விரத ஆரம்பத்தில் இலட்சார்ச்சனை நடைபெற்று பிள்ளையார்கதை நடைபெற்றது. அதற்கான படங்களை நீங்கள் கீழே காணலாம்.
காரைநகர் அபிவிருத்திக்கென பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியிலிருந்து 24இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு
காரைநகர் அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களால் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு நிதியிலிருந்து சுமார் 24இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியின் வேலைத்திட்டங்கள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் பூர்த்தியாக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வரவுசெலவுத் திட்டத்தினூடாக பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்நிதிகளை ஒதுக்கியுள்ளனர்.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. விஜயகலா மகேஸ்வரன் தனது நிதியிலிருந்து
1. வட பிராந்திய போக்குவரத்துச்சபையின் காரைநகர் அலுவலகத்திற்கு கணினி கொள்வனவுக்கென சுமார் 75ஆயிரம் ரூபாவும்,
2. இலகடி அத்திபுர கந்தன் ஆலய கட்டிட நிதிக்காக 75ஆயிரம் ரூபா,
3. காரைநகர் பிரதேச குடிநீர் விநியோகத் தாங்கிகள் கொள்வனவுக்கென 8இலட்சம் ரூபா,
4. தங்கோடை கிராம அபிவிருத்திச்சங்க கணினி மற்றும் போட்டோ கொப்பி இயந்திர கொள்வனவுகளுக்காக 7இலட்சம் ரூபா,
5. வேரப்பிட்டி ஸ்ரீ கணேசா வித்தியாலய அலுவலகத்திற்கான அலுமாரி கொள்வனவுக்கு 25ஆயிரம் ரூபா,
6. தோப்புக்காடு மறைஞான சம்பந்தர் வித்தியாசாலையின் அலுமாரி கொள்வனவுக்கென 25ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்
1. ஊரி அன்னமார் ஆலய வாகன கொள்வனவுக்கு 1இலட்சம் ரூபா
2. பிட்யெல்லை ஞானவைரவர் ஆலய நிதிக்காக 1இலட்சம் ரூபா
3. விளானை முன்பள்ளி பாடசாலைக் கட்டிடத்திற்கு 75ஆயிரம் ரூபா
4. மருதபுரம் ஸ்ரீமுருகன் ஆலய கட்டிட நிதிக்கு 1இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது

அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சில்வஸ்ரின் அலெஸ்ரினின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்
1. கலைவாணி சனசமூக நிலைய தளபாடக் கொள்வனவு 25ஆயிரம் ரூபா
2. திக்கரை திருச்செந்தூரன் முன்பள்ளி தளபாடக் கொள்வனவுக்கு 25ஆயிரம் ரூபா
3. கங்கைமதி சனசமூக நிலைய அபிவிருத்திக்கு 1இலட்சம் ரூபா
4. வியாவில் ஐயானார் மீனவ சங்கத்தின் மின்இணைப்பிற்காக 65ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்
1. வேரப்பிட்டி கிராம அபிவிருத்திச்சங்க தளபாடக் கொள்வனவுக்கு 50ஆயிரம் ரூபாவும்
2. வேதரடைப்பு கிராம அபிவிருத்திச்சங்க தளபாட கொள்வனவுக்கு 50ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களாலும் ஒதுக்கப்பட்ட 16வேலைத்திட்டங்களும் இம்மாத இறுதிக்குள் நிறைவடையவுள்ளன.

இலங்கையில் க.பொ.த. சாதாரணம் 12ம் திகதி ஆரம்பமாகியது
இலங்கையில் நடைபெறும் க.பொ.த.சாதாரணம்(O/L) பரீட்சையில் காரைநகரின் 4பாடசாலைகளிலிருந்து சுமார் 174மாணவர்கள் இன்றைய தினம் பரீட்சைக்குத் தோற்றினர். இதில் காரைநகர் தியாகராஜா மத்திய மகா வித்தியாலயத்தில் 81மாணவர்களும் யாழ்ரன் கல்லூரியல் 51மாணவர்களும் வியாவில் சைவ வித்தியாசாலையில் 19மாணவர்களும் சுந்தரமூர்த்திநாயனார்; வித்தியாசாலையில் 23மாணவர்களுமாக மொத்தம் 174மாணவர்கள் தோற்றினர். 12ம் திகதி ஆரம்பமாகிய இப்பரீட்சை எதிர்வரும் 21ம் திகதி நிறைவுபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் சிறப்பாக பரீட்சை எழுதி சித்தியடைய karainagar.com இணையத்தளம் வாழ்த்துகிறது.
Subscribe to:
Posts (Atom)