காரைநகரில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் நிலையான வைப்புப்பணம் சுமார் 4இலட்சம் ரூபாய்கள் மோசடி அதிபர் வாக்குமூலம்
காரைநகர் கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலய பழையமாணவர் சங்கத்தின் 4இலட்சம் ரூபா பெறுமதியான நிலையான வைப்புச்சான்றிதழ் இன்றுவரை தம்மிடம் ஒப்படைக்கப்படவில்லை என வித்தியாலய அதிபர் பொன்.சிவானந்தராஜா கவலை தெரிவித்துள்ளார். எமது இணையத்தளத்திற்கு தகவல் தருகையில் காரை தியாகராஜா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் கடந்த மாதம் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது புதிய நிர்வாக சபையும் தெரிவுசெய்யப்பட்டது. இக்கூட்டத்தில் முன்னாள் பொருளாளராக கடமையாற்றிய ந.பாரதி அவர்கள் தமது அறிக்கையில் நிலையான வைப்பாக 4இலட்சம் ரூபா இருப்பதாக காட்டியுள்ளார். ஆனால் இன்றுவரை(14.02.2012) புதிய நிர்வாகசபையிடம் இந்நிலையான வைப்புச் சான்றிதழ் ஒப்படைக்கப்படவில்லை என்று எமது இணையத்தளத்திற்கு வித்தியாலயத்தின் அதிபர் பொன்.சிவானந்தராஜா கவலையுடன் தெரிவித்துள்ளார். பழைய மாணவர் சங்கக்கூட்டம் நடைபெற்று சுமார் 45நாட்கள் கடந்த நிலையிலும் முன்னாள் பொருளாளரான பாரதி அவர்களை இந்நிலையான வைப்புச் சான்றிதழ் தொடர்பாக கேட்கும் பொழுதெல்லாம் சாக்குப்போக்குச் சொல்லிவரும் இவர் இறுதியாக அந்த நிலையான வைப்புச்சான்றிதழ் தொலைந்து விட்டது எனவும் கூறுகின்றார். ஆனால் அதனை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டும் அதுவும் பயனளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இங்கு குறிப்பிட்ட ந.பாரதி அவர்கள் கடந்த பழைய மாணவர் சங்கத்தில் பொருளாளராக கடமையாற்றியவர் தற்போது இப்பாடசாலை அபிவிருத்திச்சபையின் செயலாளராகவும் மணிவாசகர் சபையின் பொருளாளராகவும் காரை கிட்ஸ்பார்க் முன்பள்ளியின் அங்கத்தவராகவும் செயற்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் செய்திகளை அலசி ஆராயாமல் முற்றிலும் போலியான செய்திகளினைப் பிரசுரித்தும் உலகம் வாழ் காரைநகர் மக்களை மிகவும் இழிவான முறையில் எழுதிவரும் காரைநியூஸ் இணையத்தளத்தின் காரைநகர் செய்தியாளருமாவார்.
இப்பொதுப்பணிகளில் ஈடுபடுபவர்கள் தங்கள் கடமைக்கு மேலதிகமாக சில வேளைகளில் தவறுகள் ஏற்பட்டாலும் கூட அதனை உடனடியாக திருத்தி நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். இந்த நிலையான வைப்புச்சான்றிதழ் தொடர்பாக அறிந்த காரை இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.